1. Home
  2. தமிழ்நாடு

கேரளாவில் கோயில்களில் அரளி பூவை பயன்படுத்துவதற்கு தடை..!

1

கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் சுரேந்தர். இவரது மகள் சூர்யா (23). நர்சிங் படித்துள்ளார். இவருக்கு லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் வேலை வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து லண்டன் செல்வதற்காக அவர் தயாராகிக் கொண்டிருந்தார். செல்போனில் பேசிக்கொண்டிருந்த அவர், வீட்டின் முன்பு இருந்த அரளி செடியில் இருந்து ஒரு பூவை எடுத்து விளையாட்டு தனமாக வாயில் போட்டுள்ளார். அதன் பிறகு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.

கேரளா மாநிலத்தில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் பூஜையின்போதோ அல்லது சாமி சிலைகளுக்கு மாலை அணிவிக்கும்போதோ அரளி பூக்களை பயன்படுத்தக்கூடாது என அரசு தடை வித்தித்துள்ளது. அரளி பூக்களுக்கு பதிலாக துளசி, செம்பருத்தி பூக்களை பூஜைக்கு பயன்படுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like