1. Home
  2. தமிழ்நாடு

கேரளாவின் கோழிக்கோடு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு..!

1

கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பில் இருவர் உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. மேலும் 4 பேருடன் தொடர்பில் இருந்த 126 பேர் கேரளா சுகாதாரத்துறை கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில் தமிழக – கேரளா எல்லையோர மாவட்டங்களில் உள்ள சோதனைச் சாவடியில் கண்காணிப்பை தீவிரபடுத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டது. அதன்படி கேரளாவில் இருந்து வருவோரை தமிழக எல்லையில் கண்காணிக்கவும், அவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நிபா வைரஸ் எதிரொலியாக கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ் பாதிப்பால் இதுவரை 789 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 77 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கண்காணிப்பில் உள்ள 157 சுகாதர பணியார்களில் 13 பேர் கோழிக்கோடு மருத்துமனையில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். குட்டியாடி, ஆயஞ்சேரி பகுதியில் மத்திய குழுவீனர் இன்று ஆய்வு மேற்கொள்கின்றனர். மேலும் அங்கு வவ்வால் கணக்கெடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கேரளாவில் நிபா வைரசுக்கு 2 பேர் உயிரிழப்பு!

இதேபோல் நிபா வைரஸ் தொற்று காரணமாக புதுச்சேரி மாஹே பிராந்தியத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அறிகுறி உள்ளவர்களுக்கு உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்ய கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Trending News

Latest News

You May Like