1. Home
  2. தமிழ்நாடு

700 மில்லியன் டாலர் மதிப்பிலான அதானி குழுமத்துடன் செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்த கென்யா அதிபர்..!

1

அமெரிக்க குற்றவியல் துறை அதானி குழுமத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்த வழக்கு அதானி குழுமத்தை 360 கோணத்திலும் தாக்கியது. இந்த வழக்கின் காரணமாக அதானி குழும நிறுவனப் பங்குகள் 23 சதவீதம் வரையில் சரிந்துள்ளது மட்டும் அல்லாமல் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 2.25 லட்சம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. அதேபோல் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு சுமார் 83000 கோடி ரூபாய் வரையில் சரிந்துள்ளது.

கௌதம் அதானியை காலையில் அமெரிக்க புரட்டிப்புரட்டி அடித்த நிலையில், மாலையில் கென்யா புரட்டிப்போட்டு அடிக்கிறது. கென்யா நாட்டின் அதிபரான வில்லியம் ரூட்டோ தனது முதல் அறிவிப்பில் விமான நிலையத்தை விரிவுபடுத்தும் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்து அவர் அடுத்த அறிவிப்பில் மற்றொரு குண்டை தூக்கிப்போட்டார். வில்லியம் ரூட்டோ விமான நிலைய விரிவாக்க திட்டத்தை ரத்து செய்வதோடு மட்டுமல்லாமல், கென்ய அரசு, அதானி குழுமத்தின் துணை நிறுவனத்துடன் 700 மில்லியன் டாலர் மதிப்பிலான மின் பரிமாற்ற லைன்களை அமைக்க கையெழுத்திட்ட ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளது.

அமெரிக்க குற்றவியல் துறை, கௌதம் அதானி, அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நிறுவனத்தின் நிர்வாகிகளின் மீது பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஊழல் மற்றும் மோசடி திட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது. இதில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு 2100 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து இந்திய அரசிடம் 14 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தை கைப்பற்றியுள்ளதாக அமெரிக்க குற்றவியல் நீதிமன்றம், FBI, SEC குற்றம்சாட்டியுள்ளது. அதானி குழுமம் இந்த குற்றச்சாட்டுகளை “அடிப்படையற்றவை” என்றும் முழுமையாக மறுப்பதாக அறிவித்தாலும், அமெரிக்க SEC பிடிவாரன்ட் விடுத்துள்ளதால் கௌதம் அதானி இனி அமெரிக்க எல்லைக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

Trending News

Latest News

You May Like