1. Home
  2. தமிழ்நாடு

முதல்வரை கைது செய்தது டெல்லி மக்களுக்கு செய்யப்பட்ட துரோகம் : கெஜ்ரிவால் மனைவி பதிவு..!

1

மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். பின்னர், அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில், கெஜ்ரிவாலை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் கைது செய்யப்பட்டது டெல்லி மக்களுக்கு செய்யப்பட்ட துரோகம் என கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;- "பிரதமர் மோடி தனது அதிகார ஆணவத்தால் 3 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-மந்திரியை கைது செய்து, அனைவரையும் நசுக்கப் பார்க்கிறார். இது டெல்லி மக்களுக்கு செய்யும் துரோகம். உங்கள் முதல்-மந்திரி எப்போதும் உங்களுடன் நின்றவர். உள்ளே (சிறையில்) இருந்தாலும் சரி, வெளியில் இருந்தாலும் சரி, அவருடைய வாழ்க்கை நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு எல்லாம் தெரியும். ஜெய் ஹிந்த்." இவ்வாறு சுனிதா கெஜ்ரிவால் பதிவிட்டுள்ளார். 

Trending News

Latest News

You May Like