திகார் சிறைக்கு புறப்பட்டார் கெஜ்ரிவால்..!

டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்புடைய சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த மார்ச் 21 ஆம் தேதி கைது செய்தது. விசாரணைக்கு பிறகு, கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி டெல்லி திகார் சிறையில் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மே 10 ஆம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஜூன் 2 ஆம் அவர் சிறைக்கு திரும்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்நிலையில், மருத்துவக் காரணங்களுக்காக இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரி கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அரவிந்த் கெஜ்ரிவால் தனது மனுவில், எனது எடை மிகவும் குறைந்துள்ளது. ஒருவருக்கு எவ்வித காரணமும் இல்லாமல் ஒரு மாதத்தில் 7 கிலோ எடை குறைந்தால் அது தீவிர பிரச்சினை. எனவே, மருத்துவர்கள் எனக்கு பல்வேறு பரிசோதனைகளை பரிந்துரை செய்துள்ளனர். அனைத்துபரிசோதனைகளும் செய்தால்தான், உள்ளே ஏதாவது தீவிர நோய் இருக்கிறதா, இல்லையா என்பது தெரியவரும் என்றும் கூறியுள்ளனர். எனவே நான் சிறையில் மீண்டும் சரணடைய 7 நாட்கள் அவகாசம் வேண்டும் எனக் கோரி இருந்தார்.அவரது மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில் மீண்டும் சரணடைவதற்காக திகார் சிறைக்கு புறப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்...இடைக்கால ஜாமின் முடிந்ததால் சரணடைய தனது வீட்டிலிருந்து புறப்பட்டார் கெஜ்ரிவால்... திகார் சிறைக்கு செல்லும் முன் ராஜ்காட் சென்று காந்தி நினைவிடத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கட்சி எம்.பி., எம்.எல்.ஏ., நிர்வாகிகளுடன் உரையாற்ற உள்ளார்.மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் தனது மனைவி, மற்றும் ஆம் ஆத்மி நிர்வாகிகளுடன் ஹனுமான் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்
जय बजरंग बली 🕉️🙏
— Vikas Tiwari (@AapVikas123) June 2, 2024
लोकतंत्र और संविधान बचाने की लड़ाई में जेल जाने से पहले CM @ArvindKejriwal जी ने अपने परिजनों और पार्टी नेताओं के साथ CP स्थित प्राचीन हनुमान मंदिर में संकटमोचक हनुमान जी के दर्शन कर आशीर्वाद लिया।#केजरीवाल_झुकेगा_नहीं pic.twitter.com/Y0501fjWoY
जय बजरंग बली 🕉️🙏
— Vikas Tiwari (@AapVikas123) June 2, 2024
लोकतंत्र और संविधान बचाने की लड़ाई में जेल जाने से पहले CM @ArvindKejriwal जी ने अपने परिजनों और पार्टी नेताओं के साथ CP स्थित प्राचीन हनुमान मंदिर में संकटमोचक हनुमान जी के दर्शन कर आशीर्वाद लिया।#केजरीवाल_झुकेगा_नहीं pic.twitter.com/Y0501fjWoY