வெளியான கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்..! குவியும் வாழ்த்துக்கள்..!
தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்தில் பெரிய நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்து முன்னணி பெரிய ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு,ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்து இருக்கிறது. மேலும், பழம்பெரும் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை பழம்பெரும் படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இந்தப் படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது. அதோடு இந்த படத்துக்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கூட வழங்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் சமீப காலமாக சோசியல் மீடியாவில் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும், இவர் காதலிப்பதாகவும் செய்திகள் பரவி வந்தது. ஆனால், அதைப்பற்றி கீர்த்தி சுரேஷ் வந்தது. வெளிப்படையாக பேசவில்லை. அதன் பின் இவர் ஆண்டனி தட்டில் என்பவரை தான் திருமணம் செய்ய இருக்கிறார் என்று கூறப்பட்டது.கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். கொச்சியில் உள்ள தனியார் கல்லூரியிலும் இருவரும் சேர்ந்து படிப்பை தொடர்ந்தனர். நல்ல நண்பர்களாக தொடங்கி காதலர்களாக மாறியுள்ளனர்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி திருமணம் இன்று கோவாவில் நடைபெற்றது. இதில் நடிகரும், தவெக தலைவருமான விஜய் கலந்துகொண்டார். வேஷ்டி, சட்டையுடன் கூடிய லுக்கில் அவரது புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள், திரையுலகினர் கீர்த்தி - ஆண்டனி திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
#ForTheLoveOfNyke pic.twitter.com/krtGlussB3
— Keerthy Suresh (@KeerthyOfficial) December 12, 2024