1. Home
  2. தமிழ்நாடு

இந்தி தெரியாது போயா- வைரலாகும் கீர்த்தி சுரேஷின் ரகுதாத்தா டீசர்..!

Q

மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான ‘மகாநடி’ படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்று அனைத்து தரப்பு மக்களிடையேயும் கவனம் பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

அண்மையில் அவர் நடித்த மாமன்னன் மற்றும் நானியின் தசரா படத்தில் அவரது கதாபாத்திரமும் நடிப்பும் பேசப்பட்டது. 

இந்நிலையில், ‘கே.ஜி.எஃப்’, ‘காந்தாரா’ படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கு ‘ரகு தாத்தா’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. காமெடியாகவும் 'இது எல்லாம் மீறி இந்தியை திணித்தே தீருவோம் என்றால்.. இந்தி தெரியாது போயா' போன்ற இந்தி திணிப்புக்கு எதிராக இடம்பெற்று அழுத்தமான வசனங்கள் கொண்ட இந்த டீசரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like