1. Home
  2. தமிழ்நாடு

கழுத்தில் மஞ்சள் தாலியுடன் பட விழாவில் கீர்த்தி சுரேஷ்!

Q

கீர்த்தி சுரேஷ், பேபி ஜான் என்ற இந்தி படத்தில் நடித்திருக்கிறார். இது, தெறி படத்தின் இந்தி ரீ-மேக் ஆகும். இதில் அவர் சமந்தா கேரக்டரில் நடித்திருக்கிறார். 

பேபி ஜான் படம், கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி வரும் டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகிறது. இதையடுத்து, இப்படத்தின் ப்ரமோஷன் விழா நேற்று நடைப்பெற்றது. 

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் 15 வருடங்களாக காதலித்து வந்த, துபாயில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடந்தது. இவர்களது திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள், திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

பேபி ஜான் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் புது பெண்ணான நடிகை கீர்த்தி சுரேஷ் அல்ட்ரா மாடர்ன் உடையில் பட விழாவில் கலந்து கொண்ட போட்டோ தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் ஆகி உள்ளது. இது திருமணத்திற்கு பின் கீர்த்தி சுரேஷ் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் ரசிகர்களுக்கு ஏற்றவாறு கவர்ச்சி உடையை அணிந்துக் கொண்டு புரமோஷனுக்கு சென்றுள்ளார்.

இந்த படவிழாவில் அவர் திருமண பொலிவுடன், சிரித்த முகத்துடன், சிவப்பு நிற கவர்ச்சியான உடையில் கழுத்தில் புது தாலியுடன் வந்திருந்தார். கீர்த்தி சுரேஷ் தேவதை போல் காட்சியளித்தார். அவர் கழுத்தில் தாலியுடன் மாடர்ன் லுக்கில் வந்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் இந்த புகைப்படங்களை ரசிகர்கள் படுவேகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

சில முன்னணி நடிகைகள் பட புரமோஷன்களை தவிர்த்து வரும் நிலையில், திருமணம் முடிந்த கையோடு தேனிலவுக்கு செல்லாமல் பட விழாவில் கலந்து கொண்டுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்! சினிமா மீது கீர்த்தி சுரேஷ் வைத்திருக்கும் ஆர்வமும் பற்றும் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.


 


 

Trending News

Latest News

You May Like