எங்கள் சின்னத்தை வைப்பதா.?விஜய்க்கு எதிராக களம் இறங்கிய தேசிய கட்சி!
தமிழகத்தில் 50 ஆண்டு காலத்திற்கு மேல் திமுக- அதிமுக ஆட்சி அதிகாரத்தை மாறி, மாறி கைப்பற்றி வருகிறது. இந்த கட்சிகளுக்கு எதிராக எந்த கட்சி தொடங்கப்பட்டாலும் மீண்டும் இந்த கட்சியோடு கூட்டணி வைக்கும் நிலை தான் உருவாகிறது. இந்தநிலையில் தான் திரைத்துறையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் போதே மக்கள் சேவைக்காக களம் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டுள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை பதிவு செய்த விஜய், தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர்கள் சேர்க்கையை தொடங்கினார். திராவிட கட்சிகளுக்கு போட்டியாக பல லட்சம் பேர் இணைந்தனர். இந்தநிலையில் விரைவில் அரசியல் கட்சியின் முதல் மாநாட்டை நடத்தவுள்ள நிலையில், இன்று தனது கட்சியின் கொடியையும் பாடலையும் வெளியிட்டார்.
நடிகர் விஜய்யின் கட்சி கொடியில் அடர்சிவப்பு, மஞ்சள் நிற பின்னணியில் 2 போர் யானைகள் வாகை மலர் ஆகியவை அக்கட்சி கொடியில் இடம்பெற்றுள்ளது. இதில் யானை சின்னத்தை நெட்டிசன்கள் டிரோல் செய்து வருகின்றனர். இதனிடையே நடிகர் விஜய்க்கு ஷாக் கொடுக்கும் வகையில் பகுஜன் சமாஜ் கட்சி களத்தில் இறங்கியுள்ளது. நடிகர் விஜய் கட்சி கொடியை அறிமுகப்படுத்திய நிலையில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் இடம் பெற்றுள்ள யானையின் சின்னத்தை நீக்க கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தமிழக வெற்றி கழகத்தின் தலைமையகத்திற்கு கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின்( BSP) சின்னமான யானை படத்தை பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது எனவும் உடனடியாக விஜய் கட்சியின் கொடியில் உள்ள யானை படத்தை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விஜய் தனது கொடியில் உள்ள யானை சின்னத்தை நீக்காத பட்சத்தில் சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின் படி யானை சின்னத்தை வேறொரு கட்சி பயன்படுத்தக் கூடாது என பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியில் உள்ள யானை அமைதியாக சாந்தமாக உள்ள யானையாகும்,. நடிகர் விஜய் கட்சிக்கொடியில் உள்ள யானை போர் யானையாகும். எனவே தற்போது எழுந்துள்ள எதிர்ப்பிற்கு நடிகர் விஜய் என்ற பதில் அளிக்க போகிறார் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.