1. Home
  2. தமிழ்நாடு

மக்களவையில் கழகத்தின் உரிமைக் குரல்கள் இன்னும் அழுத்தமாக ஒலிக்கும் : அமைச்சர் உதயநிதி..!

1

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வெற்றியை உறுதி செய்துள்ளது. 

இந்நிலையில் கழகத்தின் உரிமைக் குரல்கள் மக்களவையில் இன்னும் அழுத்தமாக ஒலிக்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- "2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தொகுதிகளில் 40/40 என்ற வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து, 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்ற ஜனநாயகப் பண்புடன் கழகத்தைத் தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா, 50 ஆண்டு காலம் தலைவராக கழகத்தை வளர்த்தெடுத்து வழிநடத்திய முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சென்று தேர்தல் வெற்றியைச் சமர்ப்பித்தோம். 75 ஆண்டு காலம், மாநில சுயாட்சிக்காகவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் முழங்கிய கழகத்தின் உரிமைக் குரல்கள் மக்களவையில் இன்னும் அழுத்தமாக ஒலிக்கும்!" இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like