1. Home
  2. தமிழ்நாடு

குர்ஆனை கைகளால் எழுதி காயல்பட்டினம் இளம்பெண் சாதனை..!

1

காயல்பட்டினம் நெய்னார் தெருவைச்சேர்ந்த கே.எஸ்.முஹம்மத் அபூபக்கர், எம்.எஸ்.பீவி பாத்திமா தம்பதியின் மகளுமான இவர் பி.எஸ்.சி. பட்டதாரியும், மார்க்கம் கற்ற ஆலிமாவும் ஆவார். தான் பயின்ற முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரியின் திருக்குர்ஆன் மனனப்பிரிவில் பகுதிநேர ஆசிரியராக சேவையாற்றி வரும் இவர், திருமறை குர்ஆன் முழுவதையும் மூன்றே மாதங்களில் தனது கைகளால் அழகுற எழுதி, ஆறு பாகங்களாக பிரித்து பைண்டிங் செய்து, நூல் வடிவில் காட்சிப்படுத்தியுள்ளார்.

இவரது இந்தச் சாதனையை முன்னிட்டு,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. நகரத் தலைவர் எம்.எஸ்.நூஹ்சாஹிப் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். தி.மு.க. தூத்துக்குடி மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.ஐ.காதர் அனைவரையும் வரவேற்றார். திருமறை குர்ஆனை கைகளால் எழுதி சாதனை புரிந்த கே.எம்.ஏ.கதீஜா ஷரீபாவை பாராட்டி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அப்பரிசை சாதனை பெண்ணின் தந்தை கே.எஸ்.முஹம்மத் அபூபக்கரிடம் வழங்க, நகர தலைவர் அவருக்கு பயனாடை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.

நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில கவுரவ ஆலோசகர் எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா, காயல்பட்டினம் நகர நிர்வாகிகளான எம்.ஏ.முஹம்மத் ஹஸன், முஜீப், என்.டீ.அஹ்மத் ஸலாஹுத்தீன் உள்ளிட்டோர்  உடன் இருந்தனர்.

Trending News

Latest News

You May Like