1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் வேலூர் மக்களவை தொகுதியில் களமிறங்கிய கதிர் ஆனந்த் - பின்னணி என்ன!

1

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில்,  திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 10 தொகுதிகளும்,  இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதியும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதியும், மதிமுக, முஸ்லிம் லீக், கொமதேக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. 

கடந்த முறை வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கதிர் ஆனந்துக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படாது என்று கூறப்பட்டு வந்த நிலையில் மீண்டும் அவருக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது அதற்கு அவர் செய்த நலதிட்டங்கள் தானாம்.

தமிழ்நாட்டின் வேலூர் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் கதிர் ஆனந்த் . இவர் பிரபல திமுக அரசியல்வாதி துரைமுருகனின் மகன் ஆவார். வேலூர் தொகுதியில் இருந்து 2019 லோக்சபா தேர்தலில் முதல் முறையாக கதிர் ஆனந்த் போட்டியிட்டு 4,85,340 வாக்குகள் வித்தியாசத்தில்வெற்றி பெற்றார்.

தனது 5 வருட எம்.பி கால கட்டத்தில் சத்துவாச்சாரி சுரங்க பாதை கொண்டு வந்தது முதல் கேவி குப்பம் பகுதியில் நிறுவப்பட்டுள்ள டோல் கேட்டை செயல்பாட்டுக்கு வர விடாமல் தடுத்தது வரை லிஸ்ட் போட்டு சொல்லி மக்களிடம் தான் செய்த சாதனைகளை செய்துள்ளார் .வேலூர் மாவட்டத்திற்கு, சத்துவாச்சாரி சுரங்கப்பாதை கொண்டு வந்தது முதல்.. வேலூர் ஏர்போர்ட் செயல்பாட்டுக்கு வரும் வரை நாடாளுமன்றத்தில் கதிர் ஆன்ந்த் குரல் எழுப்பியது மறுக்கமுடியாத உண்மை.

குறிப்பாக, வந்தே பாரத் ரயில் காட்பாடியில் நிற்க வேண்டும் என ரயில்வே அதிகாரியுடன் விவாதம் செய்து அங்கு நின்று செல்ல வழிவகை செய்தவரும் இவரே.வாணியம்பாடி மேட்டுப்பாளையம் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அமைத்துக்கொடுத்ததற்கான பணியை தொடங்கி வைத்தல், மக்களுக்கான மருத்துவ முகாம்கள், அரசின் திட்டங்களை அறிந்துகொள்ளும் விழிப்புணர்வுகள் என நலப்பணிகளை செய்து வந்தார். இதனால் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றார். நாடாளுமன்றத்தில் தொகுதி மக்களுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் குரல் கொடுத்து வந்ததால் இவர் செல்வாக்கு மிக்க வாக்காளராக மாறினார். மக்களின் குறைகளை கேட்டு செயல்படுத்தியவர்.வேலூர் மக்களவை தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகளுக்கு நேரில் செல்ல முடியாவிட்டாலும்  மக்களுக்கு தேவையான  விஷயத்தை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு தீர்த்து வைத்துள்ளார். 

வேலூர் மக்களவை தொகுதியை உள்ளடக்கிய அணைக்கட்டு, கே.வி.குப்பம் வேலூர் உள்ளிட்ட இடங்களில் பாமக செல்வாக்கு இருப்பதால் இந்த ஏசி. சண்முகத்திற்கு செல்லும் பட்சத்தில் அதே சமூகத்தை சேர்ந்தவரை வேட்பாளராக அறிவித்தால் கதிர் ஆனந்துக்கும் செல்லும் என்பதால் இதையெல்லாம் கருத்தில் கொண்டு  திமுக  லைமை மீண்டும் கதிர் ஆனந்துக்கு வாய்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது. 

  


 

Trending News

Latest News

You May Like