விஜயகாந்தை பார்த்து கலங்கிய கஸ்தூரி!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேமுதிக நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். சமீபத்தில் விஜயகாந்த் மீண்டும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த். சளி மற்றும் காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
பின்னர் திடீரென அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும் இதனால் அவருக்கு நுரையீரல் சிகிச்சை தேவைப்படுவதாகவும் தகவல் வெளியானது. இதனைக் கேட்ட தேமுதிக தொண்டார்களும், அரசியல் கட்சியினரும் அதிர்ச்சி அடைந்தனர். விஜயகாந்த் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என தங்களின் விருப்பத்தை தெரிவித்தனர். கட்சி தொண்டர்களும், விஜயகாந்தின் ரசிகர்களும் விஜயகாந்த் நலம்பெற வேண்டி பல்வேறு கோவில்களில் வழிபாடு நடத்தினர்.
விஜயகாந்தால் தற்போதும் நடக்க முடியவில்லை, பேசவும் முடியவில்லை. இருப்பினும் தொண்டர்களின் கேப்டன் கேப்டன் என்ற முழக்கத்தை கேட்டதும் அவர்களை பார்த்து முடியாத நிலையிலும் தம்ப்ஸ் அப் செய்தார். இதனை பார்த்து ஒருபக்கம் தொண்டர்கள் உற்சாகமடைந்தாலும், சிங்கம் போல் வலம் வந்த கேப்டனை இப்படியாக பார்க்க வேண்டும், அவருக்கா இந்த நிலைமை என கண்ணீர் விட்டனர்.
இந்நிலையில் நடிகையும் சமூக ஆர்வலருமான கஸ்தூரி நடிகர் விஜயகாந்த் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவீட்டில், இந்த மனிதர் கம்பீர நடையுடன் கோலொச்சியதை பார்த்திருக்கிறேன். 2006 ஆம் ஆண்டு இவருக்காக வாக்கு சேகரித்தேன். கேப்டனை இப்படி பார்ப்பது மிகவும் வருத்தமாக உள்ளது.
எப்படிப்பட்ட ஆளுமை... இப்பவும் விடாப்பிடியாக கட்டை விரலை உயர்த்தியபோது... கண்கள் குளமாகிவிட்டன. பிராத்தனைகள்.. என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். கஸ்தூரியின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், அவரது இந்த நிலையை பார்க்கும்போது என்ன கடவுளடா என்று தோன்றுகிறது என்றும் அவரது உடல்நிலை மட்டும் சரியாக இருந்தால் தமிழக அரசியலில் மாற்று சக்தியாக இருந்திருப்பார் என்றும் கூறி வருகின்றனர்.
I have seen the man stride like a Colossus. I canvassed votes for him in 2006. Very sad to see captain like this.
— Kasturi (@KasthuriShankar) December 14, 2023
எப்படிப்பட்ட ஆளுமை... இப்பவும் விடாப்பிடியாக கட்டை விரலை உயர்த்தியபோது... கண்கள் குளமாகிவிட்டன . Prayers.#DMDK #PremalathaVijayakanth pic.twitter.com/4UwKn04evK