1. Home
  2. தமிழ்நாடு

19 ஆண்டுகளுக்கு பின் காசி விஸ்வநாதர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்..!

1

தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படும் இக்கோயிலில் கடந்த 4ஆம் தேதி இரவு முதல் யாக சாலை பூஜை தொடங்கியது.

கோயில் வளாகத்தில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு சிவாசாரியார்கள் வேத மந்திரங்களுடன் யாக சாலை பூஜைகளைச் சிறப்பாக நடத்தினர்.

இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடத்தப்பட உள்ளது. இதனால், கோபுர கலசங்களுக்கு மாலை அணிவித்துச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

19 ஆண்டுகளுக்குப் பின்னர் நடத்தப்பட இருக்கும் கும்பாபிஷேக விழா என்பதால், பக்தர்கள் அதிக அளவில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like