1. Home
  2. தமிழ்நாடு

இளம் பெண்ணுடன் வேலை நேரத்தில் கசமுசா..போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்!

1

அமெரிக்காவின் மேரிலான்ட் மாகணத்தின் பிரின்ஸ் ஜார்ஜ் கவுண்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. பணி நேரத்தில் இளம் பெண்ணுடன் 40 நிமிடம் காவல்துறை வாகனத்திற்குள் உல்லாசமாக இருந்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 



அந்த வீடியோவில் போலீஸ் அதிகாரி பிரான்சிஸ்கோ மார்லெட்  போலீஸ் வாகனத்திற்கு அருகே இளம் பெண் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறார். பின்னர் அவருக்கு முத்தமிட்டவாறு அணைத்துக் கொண்டு சென்ற அவர் சுற்றிலும் பார்த்துக் கொள்கிறார். இதற்கிடையே இளம் பெண் காரின் கதவை திறக்க ஒருவர் பின் ஒருவராக உள்ளே செல்கின்றனர்.

இருவரும் காருக்குள் உல்லாசம் அனுபவித்து விட்டு சுமார் 40 நிமிடங்கள் கழித்து வெளியே வந்துள்ளனர். அதன் பின்னர் ஆளுக்கு ஒரு பக்கமாக பூங்காவை நோக்கி செல்கின்றனர். இருவரும் முன்னரே அறிந்தவர்களா அல்லது திடீரென சந்திப்பு நடந்ததா என்பது தெரியவில்லை. இருப்பினும் போலீஸ் வாகனத்திற்கு உள்ளே வைத்து, பெண்ணுடன் போலீஸ் அதிகாரி உல்லாசம் அனுபவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் காவல் அதிகாரி மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிரான்சிஸ்கோ மார்லெட் சட்டத்தை மீறுவது இது முதன்முறை கிடையாது.

ஏற்கனவே முன்னாள் காதலியின் மகளை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் ஒரு மாதம் இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like