கரூர் துயரம் : வழக்கறிஞர்கள் குழுவுடன் விஜய் அவசர ஆலோசனை..!
கரூரில் த.வெ.க. பிரச்சாரக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரிய த.வெ.க. மனு தள்ளுபடி செய்யப்பட்டதுடன், பொதுச் செயலாளர் ஆனந்த், இணைச்செயலாளர் நிர்மல் குமாரின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதற்கிடையில், த.வெ.க. தேர்தல் பிரச்சார மேலாண்மைப்பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வன்முறையைத் தூண்டும் வகையில் எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டது தொடர்பாக, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், த.வெ.க. வழக்கறிஞர்கள் பிரிவுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, கரூர் சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தை நாட த.வெ.க. தரப்பு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடனும் விஜய் தீவிர ஆலோசனை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.