அதிக வெயில் பதிவான இடங்களில் முதல் 10 இடங்களில் கரூர்..!!
கத்திரி வெயில் சனிக்கிழமை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே. 5), 17 இடங்களில் வெப்ப அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவானது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி இந்தியாவில் எந்த பகுதிகளிலெல்லாம் அதிக வெயில் பதிவாகியுள்ளது என்ற விவரத்தை இந்திய வானிலை துறை வெளியிட்டுள்ளது. அதில், முதல் பத்து இடங்களில் பரமத்தி வேலூர்(கரூர் மாவட்டம்) இடம்பிடித்துள்ளது.
அதிக வெப்பம் பதிவான இடங்கள் (டிகிரி செல்சியஸ்): சாராய்கேலா (ஜார்க்கண்ட்) - 45.1, கடப்பா (ஆந்திர பிரதேசம்) - 44.8, பனாகர் (மேற்கு வங்கம்) - 44.5, நிஸாமாபாத் (தெலங்கானா) - 44.4, கான்பூர் (உத்தர பிரதேசம்) - 44.3, ஜார்சுகுடா (ஒடிஸா) - 44.0, பரமத்தி வேலூர் (தமிழ்நாடு) -43.8, ரெண்டாசிந்தலா (ஆந்திர பிரதேசம்) - 43.6,
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி பதிவான வெயில் அளவு (டிகிரி ஃபாரன்ஹீட்): பரமத்தி வேலூரில் 110.66, ஈரோடு - 110.12, திருப்பத்தூா் - 107.96, வேலூா் - 107.78, மதுரை விமானநிலையம் - 107.24, திருத்தணி, திருச்சி (தலா) - 107.06, பாளையங்கோட்டை, சேலம் (தலா) - 105.8, தஞ்சாவூா், மதுரை நகரம் (தலா) - 104, சென்னை மீனம்பாக்கம் - 102.92, தருமபுரி - 101.3, கோவை - 100.76, நாகப்பட்டினம் - 100.58, பரங்கிப்பேட்டை - 100.4.