1. Home
  2. தமிழ்நாடு

தமிழுக்கு செம்மொழி என்ற பெருமையை தேடி தந்தவர் கருணாநிதி. - முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

Q

தஞ்சாவூரில், நடந்த கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நாட்டிலேயே முதன் முறையாக சுயமரியாதை திருமணங்களை அங்கீகரித்து தமிழகம் தான் சட்டமாக்கியது. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும். நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கோரிக்கை.

தமிழுக்கு செம்மொழி என்ற பெருமையை தேடி தந்தவர் கருணாநிதி. பெற்றோர் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும். பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று தற்போது யாரும் வாழ்த்துவது இல்லை. இதற்கு காரணம், தவறாக புரிந்து கொண்டு, 16 குழந்தைகளை பெற்று கொள்ள கூடாது என்பதற்காக சொல்வதற்கு தயங்குகின்றனர்.

குழந்தைகள் இன்று அதிகம் பெற்று கொள்வதற்கு நல்ல நிலை உருவாகி இருக்கிறது. மக்கள் தொகை அடிப்படையில், பார்லிமென்டை பிரித்து கொடுக்கிறார்கள். குடும்ப கட்டுப்பாடு செய்த காரணத்தினால், தமிழகத்திற்கு ஒரு ஆபத்து வந்து இருக்கிறது. பார்லிமென்டில் தமிழக தொகுதிகள் குறையும் நிலை வந்து இருக்கிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Trending News

Latest News

You May Like