கார்த்தியின் 'சுல்தான்' பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு..!

கார்த்தியின் 'சுல்தான்' பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு..!

கார்த்தியின் சுல்தான் பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு..!
X


தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கைதி என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது அது போக அந்த படம் 100 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார் அவர் தற்போது மாஸ்டர் என்கிற படத்தை நடிகர் விஜயை வைத்து இயக்கி முடித்துள்ளார்.தற்போது நடிகர் கார்த்தி சுல்தான் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் என்கிற நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த இந்த படத்தை இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார் இவர் இதற்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தற்போது சுல்தான் படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அந்த போஸ்டரில் நடிகர் கார்த்தி ஆக்ரோஷமாக கையில் ஆயுதத்தை பிடித்துக்கொண்டு நிற்கிறார். அதுபோக அவர் அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கேப்ஷன் உங்களுடைய பாசத்திற்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி இதுதான் சுல்தான் படத்தினுடைய முதல் பார்வை கண்டிப்பாக உங்க எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்

தற்போது சுல்தான் படத்துடைய முதல் பார்வை தான் சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அதுபோக இன்று நடிகர் கார்த்தி உடைய அண்ணன் சூர்யா உடைய சூரரைப் போற்று ட்ரெய்லர் என்றுதான் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது ஆகையால் கார்த்திக் மற்றும் சூர்யா ரசிகர்கள் இன்று சமூக வலைத்தளங்களை அனல் பறக்க விட்டு வருகின்றனர்...


Next Story
Share it