முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சைகை மொழியில் நன்றி சொன்ன மாற்றுத்திறன் தம்பதி கார்த்திகேயன் - சினேகா..!
பொருளாதாரத்தில் பின்தங்கிய இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பில் கட்டணமில்லாமல் திருமணம் செய்து வைக்கப்பட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 2022 2023 ஆம் ஆண்டில் 500 இணைகளுக்கும், 2023- 2024 ஆம் ஆண்டில் 600 இணைகளுக்கும் என 1.100 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற மானியக்கோரிக்கையில் "பொருளாதாரத்தில் பின்தங்கிய 700 இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.60,000/- மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும்" என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து முதற்கட்டமாக சென்னை, திருவான்மியூரில் 21.10.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் 31 இணைகளுக்கு மங்கல நாண் எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைப்பதோடு சீர்வரிசைப் பொருட்களையும் வழங்க உள்ளார். அதேநாளில் தமிழகம் முழுவதும் 304 இணைகளுக்கு திருமணங்கள் நடைபெறவுள்ளன என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை திருவான்மியூரில் அறநிலையத்துறை சார்பில் 31 ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை சார்பில் இன்று 304 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெறுகிறது. அறநிலையத்துறை சார்பில் மணப்பெண்ணிற்கு 4 கிராம் எடையுள்ள தங்கத்தாலி. தம்பதிகளுக்கு கட்டில், மெத்தை, பீரோ உள்பட ரூ.60,000 மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கப்பட்டது. புதுமணத் தம்பதிகளுக்கு சீர்வரிசைகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்
31 ஜோடிகளின் ஒருவரான மாற்றுத்திறன் தம்பதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சைகை மொழியில் நன்றி தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Watch | முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சைகை மொழியில் நன்றி சொன்ன மாற்றுத்திறன் தம்பதி கார்த்திகேயன் - சினேகா..!
— Sun News (@sunnewstamil) October 21, 2024
சென்னை திருவான்மியூரில் இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.#SunNews | #CMMKStalin |… pic.twitter.com/EbeLuowojH