கர்நாடகாவின் முழு அடைப்பு போராட்டம் என்பது வெறும் அரசியல் மட்டுமே : டி.கே.எஸ்.இளங்கோவன்..!
தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னையில் பேட்டியளித்த டி.கே.எஸ்.இளங்கோவன், பாஜக தலைவர்கள் ஆளுங்கட்சியைத் தூண்டிவிட்டு பிரச்னையை உருவாக்குவதால், கர்நாடக அரசும் அதற்கு அடிபணிவதாக குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசியவர், காவிரி நதி கர்நாடகாவின் சொத்து அல்ல - ஆறு ஓடும் அனைத்து மாநிலங்களுக்கும் காவிரி நீர் சொந்தம் என்றும் கூறினார். மேலும், கர்நாடகாவின் முழுஅடைப்புப் போராட்டம் என்பது வெறும் அரசியல் மட்டுமே எனவும் அவர் விமர்சித்தார்.