1. Home
  2. தமிழ்நாடு

5.3 டிஎம்சி நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும்..!

1

காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு அடிப்படையில் காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டன. கர்நாடகாவில் மழை அளவு, அணைகளின் நீர் அளவு உள்ளிட்டவைகளை ஆராய்ந்து தமிழ்நாட்டுக்கான காவிரி நீர் பகிர்வு அளவை பரிந்துரைப்பதுதான் காவிரி ஒழுங்காற்று குழு. இந்த குழுவானது காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரைக்கும். இதனை பரிசீலனை செய்து தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிட உத்தரவிடக் கூடியது காவிரி மேலாண்மை ஆணையம்.

கடந்த மாதம் 21 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30ஆவது கூட்டம் கூடியது. மே மாதம் தமிழ்நாட்டுக்கு 2.5 டி.எம்.சி. காவிரி நீர் பிலிகுண்டுலுவில் இருந்து திறந்துவிட கர்நாடக அரசுக்கு கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் கர்நாடகாவோ தங்களுக்கு வறட்சி இருப்பதாக கூறி தண்ணீரை திறந்து விட மறுத்துவிட்டது.

இந்நிலையில் டெல்லியில் நேற்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் 31 ஆவது கூட்டம் நடந்தது. இதில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு உத்தரவிடப்பட்டது. தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள 5.367 டிஎம்சி காவிரி நீரை திறக்க வேண்டும். ஜூலை மாதத்திற்கான 31.24 டி.எம்.சி நீரையும் உரிய நேரத்தில் திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

Trending News

Latest News

You May Like