கர்நாடகாவை உலுக்கிய கொலை - டிரைவர் கைது..!

கர்நாடகச் சுரங்க, நிலவியல் துறையில் பணியாற்றி வந்தவர் பிரத்திமா.அவர் பெங்களூரில் பணியாற்றி வந்த நிலையில், அவருடைய கணவரும் மகனும் சிவமோகாவில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரத்திமா கழுத்தறுபட்ட நிலையில் தமது வீட்டில் இறந்து கிடந்தது கடந்த ஞாயிறு காலை 8.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில் பிரத்திமாவைக் கொலை செய்ததை அவரிடம் ஓட்டுநராகப் பணிபுரிந்த கிரண் என்பதை கண்டுபிடித்தனர்.
விசாரணையில், கிரண் கடந்த ஐந்தாண்டுகளாக அரசாங்க ஒப்பந்த ஊழியராக இருந்து வந்த நிலையில், பிரத்திமா அண்மையில் அவரைப் பணிநீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்து, அவரைக் கொலைசெய்ததாக கிரண் காவல்துறையிடம் கூறினான்.
பிரத்திமாவைக் கொலைசெய்தபின் அவன் பெங்களூரிலிருந்து ஏறக்குறைய 200 கி.மீ. தொலைவிலுள்ள சாமராஜநகருக்குத் தப்பியோடியதாகவும் போலீசார் தெரிவித்தனர்