கர்நாடக பாஜக எம்பி வி.ஸ்ரீனிவாஸ் பிரசாத் காலமானார்..!
சாமராஜநகர் பாஜக எம்பி வி.ஸ்ரீனிவாஸ் பிரசாத் (76) மாரடைப்பால் காலமானார்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஸ்ரீனிவாஸ் பிரசாத் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
கடந்த வாரம் சிறுநீர்ப்பை தொடர்பான பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. தற்போது, மைசூருவில் உள்ள ஜெயலட்சுமிபூர் இல்லத்திற்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டு, இன்று மைசூரில் இறுதி சடங்குகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.