1. Home
  2. தமிழ்நாடு

கார்கில் தாக்குதல் நடத்தியது தவறு தான் : பாக். முன்னாள் பிரதமர் ஒப்புதல்..!

1

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். இவர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவராக இருந்தார். பனாமா பேப்பர் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகினார். 

அதன்பின் இங்கிலாந்து சென்ற அவர் 4 ஆண்டுகள் கழித்து கடந்த அக்டோபர் மாதம் பாகிஸ்தான் திரும்பினார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதற்கிடையே, 6 ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி தலைவராக நவாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் மேற்கொண்ட லாகூர் ஒப்பந்தத்தை மீறி கார்கில் தாக்குதல் நடத்தியது தவறுதான் என நவாஸ் ஷெரீப் ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக, நவாஸ் ஷெரீப் கூறுகையில், 

1998-ம் ஆண்டு மே 28-ம் தேதி பாகிஸ்தான் 5 அணுகுண்டு சோதனைகளை நடத்தியது. அதன்பிறகு வாஜ்பாய் இங்கு வந்து எங்களுடன் ஒப்பந்தம் செய்தார். ஆனால் நாங்கள் அந்த ஒப்பந்தத்தை மீறினோம். கார்கில் மீது தாக்குதல் நடத்தியது எங்கள் தவறு தான் என தெரிவித்தார். 

Trending News

Latest News

You May Like