1. Home
  2. தமிழ்நாடு

கராத்தே மாஸ்டருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை..!

1

சென்னை அண்ணா நகரில் கராத்தே பள்ளி நடத்தி வந்த கெபிராஜ் (40) என்பவர் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி கற்றுக் கொடுத்து வந்தார். இந்நிலையில் இளம்பெண் ஒருவர் தான் பள்ளியில் பயின்ற போது விளையாட்டுப் போட்டிகளுக்கு வெளியூர் அழைத்துச் செல்லும்போது தனக்கு கராத்தே மாஸ்டர் பாலியல் தொல்லை கொடுத்ததாக 8 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2021ல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரை விசாரித்த காவல்துறையினர், கெபிராஜ் மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் கெபிராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் லதா நியமிக்கப்பட்டார். கராத்தே மாஸ்டர் கெபிராஜால் பாதிக்கப்பட்டவர்கள், அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அல்லது குற்றச்சாட்டு இருந்தால் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் கெபிராஜ் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் நேற்று முன்தினம் (ஆகஸ்டு 11) தீர்ப்பளித்தது. அவருக்கான தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்பட இருந்தது. இந்நிலையில், தண்டனை அறிவிப்பை ஒத்திவைத்தது. இதன்படி, அவருக்கான தண்டனை விபரங்கள் இன்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கராத்தே மாஸ்டர் கெபிராஜுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது . மேலும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

Trending News

Latest News

You May Like