1. Home
  2. தமிழ்நாடு

பராமரிப்புப் பணி காரணமாக குமரி - நிஜாமுதீன் ரயில் சேவையில் மாற்றம்..!

1

பராமரிப்புப் பணி காரணமாக கன்னியாகுமரியில் இருந்து டெல்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீனுக்கு அக்.4 மற்றும் 6-ம் தேதிகளில் இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு செல்லும் அதிவிரைவு ரயில் மதுரை, விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், அரக்கோணம், ரேணிகுண்டா, கச்சிகுடா, காசிப்பேட்டை வழியாக திருப்பிட விடப்பட உள்ளது. எனவே, இந்த ரயில் விஜயவாடா செல்லாது.

அதேபோல, ஹஸ்ரத் நிஜாமுதீனில் இருந்து கன்னியாகுமரிக்கு அக்.2 மற்றும் 9-ம் தேதிகளில் காலை 5.20 மணிக்கு புறப்படும் ரயில், பல்ஹர்ஷா, காசிப்பேட்டை, கச்சிகுடா, ரேணிகுண்டா, அரக்கோணம், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை, எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மதுரை வழியாக திருப்பி விடப்படுகிறது.இந்த ரயிலும் விஜயவாடா செல்லாது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like