1. Home
  2. தமிழ்நாடு

கன்னியாகுமரி விவகாரம் - விஷம் குடித்த மாமியார் உயிரிழப்பு!

1

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சுசீந்திரம் தெற்குமண் பகுதியை சேர்ந்த நாகராஜன், செண்பகவல்லி (வயது 48) தம்பதியின் மகன் கார்த்திக் (27). கார்த்திக் மின்வாரியத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். கார்த்திக்கிற்கு, கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த பாபுவின் மகள் சுருதி பாபு (24) என்பவரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர்.

இந்தநிலையில் புதுப்பெண் சுருதிபாபு கடந்த 21-ந் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து மகளின் தற்கொலையால் அதிர்ச்சி அடைந்த பாபு குடும்பத்தினருடன் சுசீந்திரம் போலீசில் புகார் அளித்தனர். அதில், மாமியாரின் கொடுமையால் தனது மகள் தற்கொலை செய்ததாக கூறியிருந்தார்கள். இதுதொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மறுபக்கம் திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் நாகர்கோவில் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்கள். நாகர்கோவில் கோட்டாட்சியர் நேரடியாக வந்து, கணவர் கார்த்திக், மாமியார் செண்பகவல்லி மற்றும் சுருதி பாபுவின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்..

. இந்த நிலையில் போலீஸ் விசாரணைக்கு பயந்து விஷத்தை குடித்து விட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனே செண்பகவல்லியை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாமியார் செண்பகவல்லி சற்றும் முன் சிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

Trending News

Latest News

You May Like