இறந்துபோனதாக கூறப்பட்ட குழந்தை உயிர்பிழைத்த சம்பவம்- குமரியில் அதிசியம்..!!

கன்னியாகுமரியைச் சேர்ந்த தனிஷ் மற்றும் ஷைனி தம்பதிக்கு 3 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த 25-ம் தேதி குழந்தைக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டதால், அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
ஆனால் குழந்தையின் உடல்நிலை மோசமாக இருந்ததால், அங்குள்ள மருத்துவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை பரிசோதித்த அரசு மருத்துவர்கள், குழந்தை பிழைக்க வாய்ப்பில்லை என்று கூறி சிகிச்சை அளித்துள்ளனர். ஒருகட்டத்தில் குழந்தை இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக பெற்றோர்கள் குழந்தையை கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எலிக்காய்ச்சலுக்கு வெறிநாய்க்கடி மருந்து போடப்பட்டுள்ளது. அதனால் குழந்தையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்துள்ளது என்று கூறி உரிய சிகிச்சை அளித்தனர்.
இதையடுத்து குழந்தை சில நாட்களிலேயே உடல் நலம் தேறி வீடு திரும்பியது. எலிக்காய்ச்சலுக்கு நாய்க்கடி மருந்து கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.