1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை புதிய இயக்குநராக கண்ணப்பன் நியமனம்..!

1

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் முக்கிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறை இயக்குநராக இருந்த அறிவொளி இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, தொடக்க கல்வி இயக்குநராக இருந்த கண்ணப்பன், பள்ளிக்கல்வித் துறை புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல, அரசு தேர்வுகள் துறை இயக்குநராக இருந்த சேதுராமவர்மா, தொடக்கக்கல்வி இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி இயக்குநர் லலிதாவுக்கு அரசு தேர்வுகள் இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

பள்ளிக்கல்வித் துறையின் கரூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்கள் இன்று ஓய்வு பெறுகின்றனர். இதன் தொடர்ச்சியாக, திருச்சி மாவட்ட முதன்மைக கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியாவுக்கு கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாசினிக்கு, மயிலாடுதுறை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல, விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகனுக்கு, கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

Trending News

Latest News

You May Like