பிரபல கன்னட சினிமா தயாரிப்பாளர் சடலமாக மீட்பு: தற்கொலையா?
பெங்களூர் மகாலட்சுமி லே அவுட்டில் உள்ள வீட்டில் பிரபல கன்னட சினிமா தயாரிப்பாளர் செளந்தர்யா ஜெகதீஷ் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகும் நிலையில் மாரடைப்பால் இறந்ததாக குடும்பத்தார் கூறுகின்றனர்.
'அப்பு பப்பு', 'ராம் லீலா', 'சிநேகிதரு’ போன்ற திரைப்படங்களை அவர் தயாரித்துள்ளார். நிதி நெருக்கடியால் செளந்தர்யா ஜெகதீஷ் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. போலீசாரின் அதிகாரப்பூர்வ தகவலுக்கு பின்னரே காரணம் உறுதியாகும்.