பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் மருத்துவமனையில் அனுமதி..!
பிரபல நடிகர் சிவராஜ் குமார் திடீரென்று மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் கவலை ஆழ்ந்துள்ளனர்.
கர்நாடகாவில் உள்ள வைதேகி மருத்துவமனையில் சிவண்ணாவுக்கு சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். காய்ச்சல் தவிர, பொது சுகாதார பரிசோதனையும் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவரை ஓய்வெடுக்குமாறு மருத்துவர் அறிவுறுத்தியதால், தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார்.
பெரிய பிரச்சனை எதுவும் இல்லை என அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
சில வருடங்களுக்கு முன்பு சிவன்னாவுக்கு இதயம் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டது. அதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.