1. Home
  2. தமிழ்நாடு

தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்க செய்த கனிமொழி..!

1

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை.  இதில்,  தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.  அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி,  தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் எஸ்.டி.ஆர். விஜயசீலன்,  நாம் தமிழர் கட்சி சார்பில் ரௌனா ரூத் ஜெனி ஆகியோர் போட்டியிட்டனர்.

முதல் சுற்றில் இருந்தே முன்னிலை வகித்து வந்த கனிமொழி  வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட 27 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.  கனிமொழி 5,40,729 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.  இதனையடுத்து,  அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

Trending News

Latest News

You May Like