1. Home
  2. தமிழ்நாடு

பாஜகவின் அடுத்த அஸ்திரம் : நாடாளுமன்ற தேர்தலில் நடிகை கங்கனா போட்டி!!

1

பாலிவுட் முதல் கோலிவுட் வரை முன்னணி நடிகையாக வலம் வருபவர்  கங்கனாரனாவத். .இந்திய சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துளள்வர்

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் தொடர்ந்து தனது ஆனித்தரமான கருத்துகளில் இருந்து பின்வாங்காதவர். இவருக்காக Z பிளஸ் பாதுகாப்பு வழங்கியது மத்திய அரசு.

கங்கனா ரனாவத் தாம் தூம் மற்றும் தலைவி ஆகிய தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இவர் தமிழில் தாம் தூம் படம் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து தலைவி படத்தின் ஜெயலலிதாவாக நடித்து இருந்தார். இல்லை கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருப்பார் என்று தான் சொல்ல வேண்டும். சமீத்தில் இவர் நடித்த சந்திரமுகி 2 படம் வெளியானது. தொடர்ந்து முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை கதையை பின்னணியாக கொண்ட எமர்ஜென்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தள்ளிப்போய் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பல்வேறு விவகாரத்தில் மத்திய பாஜக அரசை ஆதரிக்கும் கங்கனா, முழு அரசியல் அவதாரம் எடுக்க உள்ளார். அடுத்த வருடம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கங்கனா போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்நிலையில், கடந்த டிசம்பர் 17ஆம் தேதி பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவை நேரில் சந்தித்தார்.  இதையடுத்து  வரும் நாடாளுமன்ற தேர்தலில் கங்கனா ரனாவத் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

அந்த தகவல்களை உண்மையாக்கும் வகையில் கருத்து தெரிவித்து உள்ளார் கங்கனா ரனாவத்தின் தந்தை அமர்தீப் ரனாவத். அவர் அளித்த பேட்டியில்,  கங்கனா ரனாவத் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார்.  அவர் பாஜக சார்பில் மட்டுமே களமிறங்க உள்ளார். எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பதை கட்சி தான் முடிவு செய்யும்  என்று தெரிவித்து உள்ளார். இதன் மூலம் கங்கனா ரனாவத் அரசியல் பிரவேசம் எடுக்க உள்ளது உறுதியாகி உள்ளது.


 

Trending News

Latest News

You May Like