“ கந்தனுக்கு அரோகரா “ நடிகர் ரஜினியின் டிவிட்டர் பதிவு !! கருப்பர் கூட்டம் கைது குறித்து தமிழக அரசை பாராட்டிய ரஜினி.
“ கந்தனுக்கு அரோகரா “ நடிகர் ரஜினியின் டிவிட்டர் பதிவு !! கருப்பர் கூட்டம் கைது குறித்து தமிழக அரசை பாராட்டிய ரஜினி.

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். கந்த சஷ்டி கவசத்தை அவமதிக்கும் வகையில் விடியோ வெளியிட்டதாக 'கறுப்பர் கூட்டம்' யூ டியூப் சேனல் மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதோடு ,
#கந்தனுக்கு_அரோகரா pic.twitter.com/zWfRVpufXk
— Rajinikanth (@rajinikanth) July 22, 2020
இந்த அமைப்பைச் சேர்ந்த 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே கறுப்பர் கூட்டம் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதோடு, நேற்று 'கறுப்பர் கூட்டம்' யூ டியூப் சேனலில் உள்ள விடியோக்களும் நீக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
Newstm.in
Next Story