1. Home
  2. தமிழ்நாடு

காஞ்சிபுரம் ரவுடி என்கவுண்ட்டரில் புதிய திருப்பம்..! இறப்பதற்கு முன் எழுதிய கடிதத்தால் பரபரப்பு..!

1

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் விஷ்வா. ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன. சில குற்ற வழக்குகளுக்காக ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார்.  

இதனிடையே, அவர் கையெழுத்திடாமல் தலைமறைவாக இருந்ததால் போலீசார் பிடிவாரண்டுடன் நேற்று முன்தினம் அவரை பிடிக்க முயன்ற போது, போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். இதனால் தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். இந்த என்கவுண்ட்டரில் ரவுடி விஷ்வா சுட்டுக்கொல்லப்பட்டார்.  

இந்த நிலையில், என்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடி விஷ்வா, இறப்பதற்கு முன் எழுதிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் எழுதி உள்ள கடிதத்தில், 

என் மீது போலி என்கவுண்ட்டர் நடந்தால் அதற்கு ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் பரந்தாமன், உதவி காவல் ஆய்வாளர் தயாளன் தான் பொறுப்பு என்று கூறப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்றபோது, கையெழுத்து வாங்காமல் சுட்டு விடலாமா? என கேட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இறப்பதற்கு முன் ரவுடி விஷ்வா கடிதம் எழுதியதாக கூறப்படும் தகவல் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Trending News

Latest News

You May Like