1. Home
  2. தமிழ்நாடு

அசாமில் வீரமரணம் அடைந்த காஞ்சி. வீரர்.. கதறி அழுத கிராம மக்கள்.. ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம்

அசாமில் வீரமரணம் அடைந்த காஞ்சி. வீரர்.. கதறி அழுத கிராம மக்கள்.. ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம்


அசாம் மாநிலத்தில் கடந்த வாரம் ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது. சாலையோர பள்ளத்தில் நிலைதடுமாறி கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ராணுவ வீரர்கள் பலர் காயமுற்றனர்.

இதில் காஞ்சிபுரம் அடுத்த வெள்ளை கேட் பகுதியில் உள்ள செம்பரபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஏகாம்பரம் (42) இந்த விபத்தில் சிக்கி பலியானார். இவர் கடந்த 2000ஆம் ஆண்டு ராணுவப் பணியில் சேர்ந்தார். இவருக்குக குமாரி (35) என்ற மனைவியும், ஆதித்யா (16) மற்றும் ஜெனி மகள் (14) மகன், மகள் உள்ளனர்.

அசாமில் வீரமரணம் அடைந்த காஞ்சி. வீரர்.. கதறி அழுத கிராம மக்கள்.. ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம்

ஏகாம்பரம் இன்னும் ஆறு மாதங்களே பணியிலிருந்து ஓய்வு பெறும் நிலையில் அசாமில் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி அவர் வீரமரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அசாம் மாநிலத்தில் அவரது உடல் சொந்த கிராமத்திற்கு வந்தடைந்தது. தேசியக்கொடி போர்த்தப்பட்டிருந்த அவரது உடலை கண்டு உறவினர்கள் கதறி அழுதனர். அக்கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா, காவல்துறை கண்காணிப்பாளர் மணிமேகலை உள்ளிட்ட ஏராளமான காவலர்கள் மாவட்ட நிர்வாகம் சார்பாக மரியாதை செய்தனர்.

அதேபோல் உடல் வந்த செய்தியை அறிந்த சுற்று வட்டார கிராம மக்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டு ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்தினர். வீரமரணமடைந்த ராணுவ வீரர் ஏகாம்பரம் உடலுக்கு 21 குண்டுகள் முழுங்க அரசு மரியாதையுடனும் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

newstm.in

Trending News

Latest News

You May Like