1. Home
  2. தமிழ்நாடு

இன்று காமராஜர் பிறந்த நாள் : கல்வி தந்தை காமராஜரின் பொன் மொழிகள் ஒர் பார்வை...!

1

தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரும் தூணாக நின்றவர் காமராஜர்.எளிமையின் சிகரமான இவர் இந்திய பிரதமரையே உருவாக்கும் அளவிற்கு செல்வாக்கு பெற்றிருந்தார். அதனாலேயே அவரை கிங் மேக்கர் என அழைத்தனர். அதன் வாழ்நாளில் சில பொன்மொழிகளை நமக்காக விட்டு சென்றுள்ளார். அதை கீழே காணலாம்

  • நேரம் தவறாமை என்னும் கருவியை உபயோகிப்பவர் என்றும் கதாநாயகன் தான்
  • உன் பிள்ளையை ஊனமாய் பிறந்தால் சொத்து சேர்த்து வை. சொத்து சேர்த்து பிள்ளையை ஊனமாக்காதே
  • எல்லா மக்களிடமும் குறைபாடுகள் மட்டுமல்ல ஏதேனும் சிறப்பு சக்திகள் இருக்கத்தான் செய்யும்
  • எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை. வரலாறாய் ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை
  • சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை! அனைவருக்கும் கல்வியும் உழைப்புக்கான வாய்ப்பும் தந்தால் போதுமானது
  • பணம் இருந்தால் தான் மரியாதை தருவார்கள் என்றால் அந்த மரியாதையே எனக்கு தேவையில்லை
  • ஒரு பெண்ணிற்கு கல்வி புகட்டுவது குடும்பத்திற்கே கல்வி புகட்டுவதாகும்
  • நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்காதவன் பிணத்திற்கு சமமானவன்
  • எல்லாம் போய்விட்டாலும் வெல்ல முடியாத உள்ளம் இருந்தால் உலகத்தையே கைபற்றலாம்
  • பிறர் உழைப்பைத் தன் சுயலத்துக்குப் பயன்படுத்துவதே உலகின் மிகவும் கேவலமான செயலாகும்.படித்த சாதி, படிக்காத சாதி.. என்றொரு சாதி உண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

Trending News

Latest News

You May Like