மாறி மாறி வாக்குறுதி கொடுக்கும் கமலா - ட்ரம்ப்!
தேர்தல் பிரசாரம் மும்முரமாக நடந்து வரும் நிலையில், தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளதால், இருவரும் மாறி மாறி பல வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். குடியரசுக் கட்சியின் பேரணியில் பேசிய டிரம்ப், அமெரிக்காவுக்கு அதிக குழந்தைகள் தேவைப்படுவதால், ஆனால் பெண்களுக்கு இலவச செயற்கை கருவூட்டல் சிகிச்சை அளிப்பேன் என்று உறுதியளித்தார். இந்த திட்டத்திற்கு தேவையான நிதி உதவியை அரசு அல்லது மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் என்றும் அவர் கூறினார்.
செயற்கை கருவூட்டல் சிகிச்சைக்கு கோடிக்கணக்கில் செலவாகும் நிலையில், இந்த வாக்குறுதி அதிக வாக்குகளை பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால், முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்த வாக்குறுதியை அடுத்து யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என அந்நாட்டின் பிரபல தேர்தல் நிபுணர் ஆலன் லிக்ட்மேன் கணித்துள்ளார்.