50 கிலோ இட்லியில் கமலா ஹாரிஸ் உருவம்..!
ட்ரம்பை எதிர்த்து போட்டியிட்ட கமலா ஹாரிஸை கவுரவிக்கும் வகையில், தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் மேம்பாட்டு சங்கம் சார்பில், சென்னை கொடுங்கையூரில், சங்க தலைவர், இட்லி இனியவன் தலைமையில், 50 கிலோ இட்லி தயார் செய்யப்பட்டுள்ளது. கமலா ஹாரிஸின் உருவப்படத்தை வரைந்து பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தினர்.
இதுபற்றி சங்க தலைவர் இட்லி இனியவன் கூறுகையில், ''இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். அவர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு சமையல் கலை நிறுவனம் தயார் செய்துள்ளது. 50 கிலோ எடையுள்ள இட்லி மற்றும் அதில் கமலா ஹாரிஸின் படத்தை வடிவமைத்துள்ளார்.
கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட திட்டமிட்டிருந்தோம். இருப்பினும், உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒரு பெண், அவருக்காக இந்த இட்லியை வடிவமைத்து எங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளோம்,'' என்றார்.