1. Home
  2. தமிழ்நாடு

கமல் சிம்பு ஆக்‌ஷனில் வெளியான "தக் லைஃப்" டீசர்..! "விண்வெளி நாயகா விடியல் நீதா"

1

'விக்ரம்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் கமலின் சினிமா மார்கெட் உச்சத்தை தொட்டு விட்டது. தற்போது நடிப்பு, இயக்கம், தயாரிப்பு மற்றும் அரசியல் என எல்லா பக்கமும் மாஸ் காட்டி வருகிறார். இந்நிலையில் இன்று கமல் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு தற்போது அவர் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் 'தக் லைப்' படத்தின் மரண மாஸ் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

 இதில் கமலும், சிம்புவும் ஆக்‌ஷனில் அதகளம் செய்துள்ளனர்.

குறிப்பாக கமல் நீண்ட முடியெல்லாம் வைத்து கொண்டு நடுத்தர வயது தோற்றத்திலும், யங்கான லுக்கில் இருப்பதை போன்ற காட்சிகளும் டீசரில் இடம்பெற்றுள்ளன. அத்துடன் சிம்புவும் ஆக்ஷனில் இறங்கி அடித்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசையும் படு மாஸாக உள்ளது. என்ன கதை என சின்ன ஹிண்ட் கூட இல்லாமல் டீசரை கட் செய்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். 

Trending News

Latest News

You May Like