1. Home
  2. தமிழ்நாடு

ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு என தெரிவித்த கமல்ஹாசனின் கருத்துக்கு தவெக சார்பில் பதிலடி..!

Q

மக்கள் நீதி மய்யம் 8-ஆம் ஆண்டு விழாவில் உரையாற்றிய கமல்ஹாசன், ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு என்பது, என் அனுபவத்தில் தெரிந்து கொண்டது. நான் தோல்வி அடைந்த அரசியல்வாதி என பலரும் விமர்சிக்கின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வரத் தவறியதைத்தான் என்னுடைய தோல்வியாக நான் பார்க்கிறேன். அப்படி வந்திருந்தால், நான் பேசும் பேச்சும், இருக்கும் இடமும் வேறாக இருந்திருக்கும் என கூறினார். 

இந்த நிலையில், ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு என தெரிவித்த கமல்ஹாசனின் கருத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பதிலடி கொடுத்துள்ளார். எம்ஜிஆரை போன்று ரசிகர்களை வாக்காளர்களாக மாற்றி விஜய் வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஊழல் கூடாரத்துக்கு எதிராக வீர வசனம் பேசிய கமல், இன்று அதே கூடாரத்தில் சுயநலனுக்காக இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வு காலத்தில் அரசியலுக்கு வந்துவிட்டு, பிக் பாஸ் பணிகளை 

செய்து வந்தால் கமலுக்கு இந்த நிலைமைதான் ஏற்படும் என தவெக விமர்சித்துள்ளது. எம்ஜிஆர் வெற்றியை சிவாஜியால் பெற முடியவில்லை, எம்.ஜி.ஆர் போன்று ரசிகர்களை வாக்காளர்களாக விஜய் மாற்றுவார் என தவெக தெரிவித்துள்ளது.  

Trending News

Latest News

You May Like