நடிகர் கமல்ஹாசனின் அண்ணனும் நடிகருமான சாருஹாசன் மருத்துவமனையில் அனுமதி..!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்துள்ள சாருஹாசனுக்கு 93 வயது ஆகிறது. கடைசியாக விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் மோகன் நடித்த ‘ஹரா’ படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் அண்ணனும் நடிகருமான சாருஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவரின் மகள் சுஹாசினி, தீபாவளிக்கு முந்தைய இரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், உடனே மருத்துவமனையில் சேர்த்தோம். தீபாவளி முழுக்க இங்கேதான் கழிந்தது. ஆனால், அவர் தற்போது நலமுடன் இருக்கிறார். அறுவை சிகிச்சை செய்தால் அவர் குணமாகிவிடுவார் என டாக்டர்கள் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.