1. Home
  2. தமிழ்நாடு

கமல் 234-வது படத்தின் தலைப்பு வெளியானது ..! மிரட்டும் ஆக்‌ஷன் காட்சிகளுடன்..!

1

உலகநாயகன் கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான நாயகன் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது.

இந்நிலையில்,இன்று மாலை 5 மணிக்கு படத்தின் பெயர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்து ராஜ் கமல் நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது

அதன்படி சற்றுக்கு முன் நடிகர் கமல்ஹாசனின் 234-வது படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது 

‘தக் லைஃப்’ (Thug Life) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், ''என் பேரு ரங்க ராயர் சக்திவேல் நாயக்கன். காயல்பட்டினக்காரன்” என தனக்கே உரிய ஸ்டைலில் கமல் இன்ட்ரோ கொடுத்துள்ளார். வீடியோவில் கமலின் ஆக்‌ஷன் காட்சிகள் கவனம் ஈர்க்கின்றன. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 35 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘நாயகன்’ படத்தில் கமல் கேரக்டரின் பெயர் சக்திவேல் நாயக்கர். தற்போது இணைந்துள்ள படத்திலும் அதே பெயர் வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இப்படத்தில் நடிப்பவர்கள் விவரங்களை ராஜ்கமல் நிறுவனம் ஒவ்வொன்றாக அறிவித்துவந்தது. அதன்படி, நடிகர் ஜெயம் ரவி, நடிகர் துல்கர் சல்மான், நடிகை த்ரிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளது. 


 

Trending News

Latest News

You May Like