1. Home
  2. தமிழ்நாடு

நாளை மாலை வெளியாகிறது கமல்ஹாசனின் 234 படத்தின் பெயர்..!

1

கமல்ஹாசன் தனது 234வது படத்திற்காக இயக்குனர் மணிரத்னத்துடன் 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளார் , மேலும் இருவரும் முன்பு கிளாசிக் படமான 'நாயகன்' படத்திற்காக இணைந்து பணியாற்றினர். கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணையும் புதிய படத்திற்கு தற்காலிகமாக 'கேஎச் 234' என்று பெயரிடப்பட்டுள்ளது,

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருக்கிறது.

இதற்கிடையே 'கமல்ஹாசன் 234' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசனுடன் இயக்குனர் மணிரத்னம் பேசிக்கொண்டு இருப்பது போன்ற காட்சி அந்த புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் மணிரத்னம் இயக்கும் கமல்ஹாசனின் 234 படத்தின் பெயர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது...இதன் அறிவிப்பு வீடியோ இதோ உங்களுக்காக 


 


 

Trending News

Latest News

You May Like