1. Home
  2. தமிழ்நாடு

இயக்குநர் மணிரத்னம் பிறந்தநாள் - வாழ்த்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசன்!

1

மணிரத்னம் தமிழ் சினிமாவின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவர். இன்னும் சொல்லப்போனால் அவர் தமிழ் சினிமாவில் மாஸ்டர், தமிழ் சினிமாவின் தக் என்று கூறலாம். மணிரத்னம் எப்போதுமே தமிழ் சினிமாவில் இருந்து தன்னை முற்றிலுமாக விலக்கிக் கொண்டு, வேறு விதமான படங்களை தமிழில் கொடுக்கும் இயக்குநர். இவரது பல படங்கள் இன்றைக்கும் திரைப்படங்கள் குறித்து படிக்க நினைப்பவர்களுக்கு பாடமாக உள்ளது.

 மொத்த இந்திய திரையுலகமும் ராமாயணம் குறித்து மாறி மாறி படங்கள் எடுத்தால் மணிரத்னம் ராவணன் குறித்து படமெடுப்பார். படங்களாக மட்டுமல்லாமல், படத்தில் தனது காட்சிகள் வழியே மணிரத்னம் ரசிகர்களுக்கு கடத்தும் திரைமொழி என்பது மற்ற இந்திய இயக்குநர்களில் இருந்து வித்தியாசமானது. இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலும் ரசிகர்களை கொண்டுள்ளார். மணி ரத்னத்தின் திரை மொழியில் இடம் பெறும் காதலும் காமமும் மற்ற இயக்குநர்களின் படங்களை விடவும் தனித்து நிற்பதுடன் உச்சத்தில் இருக்கிறது என்று கூறலாம்.

இன்று தனது 69வது பிறந்த நாளைக் கொண்டாடும் மணிரத்னத்திற்கு நடிகரும் அவரது மாமனாருமான கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்தில், " இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மணிரத்னம். நாயகனில் இருந்து தக் லைஃப் வரை சினிமாக்காரர்களாக, சினிமாவை கனவாக கொண்டவர்களாக, சினிமாவின் மாணவர்களாக, குடும்ப உறுப்பினர்களாக பயணித்து வந்துள்ளோம்.

இந்த ஒவ்வொரு கட்டத்திலும் உங்களின் இருப்பு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் எனக்கு சந்தேகம் வரும்போது எல்லாம் நான் திரும்பிப் பார்க்கையில் இருக்கும் வெகுசில நபர்களில் நீங்களும் ஒருவர். உங்கள் படங்கள் தொடர்ந்து வெளிவரட்டும், வரவேண்டும். காரணம் உங்களது ஃப்ரேம் சினிமாவிற்கு அர்த்தத்தையும் ஆழத்தையும் கொண்டு வருகிறது. என்றென்றும் உங்கள் நண்பன் கமல்ஹாசன்" என்று பதிவிட்டுள்ளார். 


 

Trending News

Latest News

You May Like