பாரதிராஜாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த உலக நாயகன் கமல்ஹாசன்..!
16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், முதல் மரியாதை உள்பட பல படங்களை இயக்கியவர் பாரதிராஜா. தமிழ் சினிமாவை கிராமங்களுக்குள் எடுத்து சென்றவர்.இவரது பிறந்தநாள் இன்று என்று சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் காலை முதலே அவரை வாழ்த்தி பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் இவர் பிறந்தநாளிற்கு உலக நாயகன் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். கிராமத்துக் குழந்தையாக உலகத்தைப் பார்த்தவர், கிராமங்களை இந்த உலகுக்கே காட்டினார். இனிய தமிழ் மக்களில் இருந்து அனைத்துத் தரப்பு சினிமா ரசிகர் மனதின் செல்லப்பிரதேசங்களிலும் தனது திரைப்படங்களால் இடம்பிடித்த பாரதிராஜாவுக்கு பிரியத்தோடு பிறந்த நாள் வாழ்த்து என பதிவித்துள்ளார்
கிராமத்துக் குழந்தையாக உலகத்தைப் பார்த்தவர், கிராமங்களை இந்த உலகுக்கே காட்டினார். இனிய தமிழ் மக்களில் இருந்து அனைத்துத் தரப்பு சினிமா ரசிகர் மனதின் செல்லப்பிரதேசங்களிலும் தனது திரைப்படங்களால் இடம்பிடித்த பாரதிராஜாவுக்கு பிரியத்தோடு பிறந்த நாள் வாழ்த்து. @offBharathiraja
— Kamal Haasan (@ikamalhaasan) July 17, 2024