1. Home
  2. தமிழ்நாடு

நேரு பிறந்த நாளில் கமல்ஹாசன் ட்வீட்..!

1

ஜவகர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார். இவர் பண்டிட் நேரு மற்றும் பண்டிதர் நேரு என்றும் அழைக்கப் பெற்றார். இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள்  குழந்தைகள் தினமாக  கொண்டாடப்படுகிறது.இந்தியா, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் பதவியேற்றார். 1964, மே 27 இல், காலமாகும் வரை இப்பதவியை வகித்து வந்தார்.

 இந்தியாவில் ஜவகர்லால் நேரு பிறந்த நவம்பர் 14 ஆம் நாளை குழந்தைகள் நாளாகக் கொண்டாடுகிறார்கள். இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியான நேரு, காங்கிரசுக் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1952 இல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்றதும் குடியரசு இந்தியாவின் முதல் பிரதமராகப் பதவி ஏற்றார். அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான நேரு, போருக்குப் பின்னான காலத்தில் அனைத்து உலக அரசியலில் மிக முக்கிய நபரானார்.

இதுதொடர்பாக நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில்  இந்தியாவை நிர்மாணித்த தனித்த பெரும் தலைவர் பண்டித ஜவாஹர்லால் நேரு அவர்கள். பெரும் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தாலும் ஏழைகளின் நிலையை உள்ளும் புறமும் தெளிவுற அறிந்து அவர்களை உயர்த்த, தன் ஆற்றலைப் பயன்படுத்திய பெருந்தகை நேரு பிறந்த நாளில் அவர் செய்த சீர்திருத்தங்களையும் கொண்டுவந்த மறுமலர்ச்சிகளையும் மனம் கொள்வோம்.


 

Trending News

Latest News

You May Like