1. Home
  2. தமிழ்நாடு

வரும் 25-ம் தேதி மநீம தலைவா் கமல்ஹாசன் எம்.பியாக பதவியேற்கிறார்..!

1

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், எம்.எம்.அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகியோரது பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, 6 இடங்களுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது. தி.மு.க. சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோரும், அதி.மு.க. சாா்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்கள் அனைவருமே போட்டியின்றி தேர்வாகினர்.

இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பை தோ்தல் நடத்தும் அதிகாரியான சுப்பிரமணியம் வெளியிட்டு இருந்தர். அதாவது, சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில், "மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் 24.07.2025-ஆம் நாளன்று முடிவடைவதால் ஏற்படும் காலியிடங்களுக்கு தி.மு.க. சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோரும், அதி.மு.க. சாா்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், கமல்ஹாசன் மற்றும் தி.மு.க.வை சேர்ந்த 3 பேரும் மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்க போகிறார்கள் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, வரும் 25 ஆம் தேதி நான்கு பேரும் எம்.பியாக பதவியேற்க உள்ளனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21 ஆம் தேதி கூட உள்ளது. ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

Trending News

Latest News

You May Like