1. Home
  2. தமிழ்நாடு

ஈரோட்டில் 29-ம் தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்..!

1

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்-9, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களிலும், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் போட்டியிடுகிறது. இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவு அளித்துள்ளது. இந்நிலையில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, வரும் 29-ம் தேதி முதல் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார்.  அவர் வரும் 29-ம் தேதி முதல் ஏப்ரல் 16-ம் தேதி வரை பிரச்சாரம் செய்ய உள்ளார்.  

Trending News

Latest News

You May Like